இந்தியாவின் முன்னணி சிஇஓ.,க்கள் பயன்படுத்தும் கார்கள்!!

அனைத்து தரப்பினருக்கும் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டிருக்கின்றனர். மேலும், கார்களை தங்களின் அந்தஸ்தின் அடையாளச் சின்னமாகவே கருதுகின்றனர். எனவே, விரலுக்கேத்த வீக்கம் என்பது போன்று அவரவர் வசதிக்கேற்ப லட்சங்களையும், கோடிகளையும் கொட்டி கார் வாங்குவதில் நாட்டம் செலுத்துகின்றனர். 

இந்த நிலையில், தங்களது அந்தஸ்தின் வெளிப்பாடாக இருக்கும் கார்களில் எந்த நிறுவனத்தின் தயாரிப்பை இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் தேர்வு செய்து பயன்படுத்துகின்றனர் என்பதை ஸ்லைடரில் காணலாம்.

முகேஷ் அம்பானி 

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி மேபேக் சொகுசு காரில்தான் அதிகம் செல்கிறார். இதுதவிர, அவரது வீட்டு கேரேஜில் மெர்டிசிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரும், மெர்சிடிஸ் எஸ்எல்-500 காரும் நிற்கின்றன.

அனில் அம்பானி 

அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மஞ்சள் நிற லம்போர்கினி அவென்டெடார் சூப்பர் காரை வைத்துள்ளார். இது தவிர போர்ச்சே மற்றும் மெர்சிடிஸ் கார்களும் அவரிடத்தில் உண்டு.

விஜய் மல்லையா

யூபி குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா கார் பிரியர்.இவரிடத்தில் ஏராளமான கார்கள் இருந்தாலும் தற்போது பென்ட்லீ கான்டினென்டல் பிளையிங் ஸ்பர் ஆடம்பர காரைத்தான் பயன்படுத்தி வருகிறார்.

குமார் மங்களம் பிர்லா 

ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் பிரிமியம் செடான் காரில்தான் சென்று வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் இந்த காரும் ஒன்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஸிம் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் அஸிம் பிரேம்ஜி தற்போது டொயோட்டோ கரோல்லா காரைத்தான் வைத்துள்ளார்.

சுனில் பார்தி மிட்டல்


பார்தி ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தற்போது மெர்சிடிஸ் எஸ்-500 செடான் காரைத்தான் பயன்படுத்தி வருகிறார். இதுதவிர, இவரது வீட்டு கேரேஜில் ஏராளமான கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

சுபாஷ் சந்த்ரா 


ஸீ டெலிபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் சந்த்ரா மெர்சிடிஸ் வயானோ 3.5 எம்பிவியை பயன்படுத்தி வருகிறார். இந்த காரில் பிளாஸ்மா டெலிவிஷனும், அதற்கு டிஷ் ஆன்டெனாவும் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஷிவ் நாடார்


எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் ஆடம்பர காரை வைத்துள்ளார். இதுதவிர, அவரிடம் மெர்சிடிஸ் 500எஸ்இஎல் காரும் உள்ளது.

விசி.பர்மன்


நாட்டின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான டாபர் குழுமத்தின் தலைவர் வி.சி.பர்மன் மெர்டிசிஸ் கொம்பரஸர் காரை வைத்துள்ளார். இதுதவிர, ஸ்போர்ட்ஸ் கார்களையும் இவர் வைத்திருக்கிறார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: