4 சிறுநீரகங்கள், 3 கணையங்களுடன் வாழும் அதிசய மனிதன்


4 சிறுநீரகங்கள், 3 கணையங்களுடன் வாழும் அதிசய மனிதன்பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கார்ல் ஜோன்ஸ் என்பவர் 4 சிறுநீரகங்கள் மற்றும் 3 கணையங்களுடன் பல அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டும் தற்பொழுது ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார்.
இளமைக்காலத்தில் டைப்- 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவரின் உறுப்புகள் செயலிழந்துள்ளதையடுத்து ஜோன்ஸ் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே இவருக்கு சிறுநீரக மற்றும் கணைய மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் தீர்மானித்தனர்.
வேல்ஸ் மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் இவரது பழைய உறுப்புகளை மாற்றி புதியவற்றை பொருத்தவே மருத்துவர்கள் தீர்மானித்திருந்தனர்.
ஆனால் அவ்வாறு செய்வதால் உடலில் வேறு எதுவும் பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கருதிய மருத்துவர்கள் அவற்றை அகற்றாமல் புதிய உறுப்புகளை பொருத்தியுள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு இவருக்கு கணைய மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைப்பெற்றுள்ளது. பல அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டும் தற்போது இவர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: