தினமும் 300 முறை கைகழுவும் வினோத பெண்


மலேசியாவைச் சேரந்த 40 வயதான யூலியா அப்துல்லா என்கின்ற பெண் தன்னிடமுள்ள ஒரு பழக்கத்தால் வேலை இழந்து மனநோய்க்கு ஆளாகிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
மலேசியாவில் மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றில் நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்படும் இரத்தம், சிறுநீர் இவற்றை பரிசோதனை செய்வதே இவரது வேலை.
மேலும் எச்.ஐ.வி மாதிரிகளையும் பரிசோதனை செய்து வந்த இவர் காலப்போக்கில் அடிக்கடி தனது கைகளை கழுவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கைகளை மட்டுமின்றி தனது தலைமுடியையும் அடிப்படி கழுவும் வினோத பழக்கத்திற்கு அடிமையாகினார்.
ஒரு நாளைக்கு 300 தடவைகள் கை கழுவுவதையும், 25 தடவைகள் தலைமுடியை ஷாம்புபோட்டு கழுவுவதையும் பழக்கமாகக் கொண்ட இவர் தினமும் 5 மணிநேரம்  இதற்காக செலவிடுகிறார்.
இவரின் இந்த பழக்கத்தை கண்காணித்த நிர்வாகம் உடனடியாக இவரை வேலையை விட்டு நிறுத்தியது. பின்பு இவரை பரிசோதனை செய்ததில் மனநோய்க்கு ஆளாகியமை தெரியவந்துள்ளது.
தற்போது சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுவிக் கழுவியே இவரது கைகள் இப்படி காட்சியளிக்கிறது. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: