அடுத்த மாதம் 10ந் தேதி நின்ஜா 300 ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்துகிறது கவாஸாகி-பஜாஜ் கூட்டணி. இந்த புதிய பைக் தற்போது விற்பனையில் இருக்கும் நின்ஜா 250ஆர் பைக்குக்கு மாற்றாக வருகிறது.
பஜாஜ் ஆட்டோவின் புரொபைக்கிங் ஷோரூம்கள் வாயிலாக இந்த புதிய பைக் விற்பனை செய்யப்பட உள்ளது. அசத்தலான ஸ்டைலுடன் வரும் இந்த புதிய பைக் கவாஸாகியின் இசட்எக்ஸ் 10ஆர் பைக்கின் டிசைன் தாத்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நின்ஜா 300 பைக்கில் 296சிசி லிக்யூட் கூல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 39 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், உயர் ரக மோட்டார்சைக்கிளில் எஞ்சின் பிரேக்கிங்குக்கு உதவும் ஸ்லிப்பர் கிளட்சும் (ஸ்லைடர் கிளட்ச் என்றும் கூறுவர்) கூடுதல் தொழில்நுட்ப அம்சமாக கூறலாம்.

இந்த பைக்கில் டூயல் ஹெட்லைட் பொருத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின் சூட்டை தணிப்பதற்காக பெரிய ஏர் வென்ட்டுகள் மற்றும் ரேடியேட்டர் ஃபேன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய நின்ஜா 300 பைக்கில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், அனலாக் ஆர்பிஎம் மீட்டரும் பொருத்தப்பட்டிருக்கிறது.

காற்றை கிழித்துச் செல்ல ஏதுவாக பெரிய வைன்ட் ஷீல்டை கொண்டிருக்கிறது.

நின்ஜா 300 பைக்கில் முன்புறம் 37மிமீ டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் சாலைகளை எதிர்கொள்ள துணைபுரியும்.

முன்புறத்தில் 290மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

ரூ.4 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.