ஷேன் வாட்சன் உள்பட 4 ஆஸி. அணி வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை- அணியிலிருந்து நீக்கம்!

Watson 3 Others Dumped From Australia Squad மொகாலி: இந்தியாவுடனான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 4 வீரர்களை ஆஸ்திரேலியா அணி அதிரடியாக நீக்கியிருக்கிறது. 

கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியும் பெற்று தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

3-வது டெஸ்ட் போட்டி வரும் 14-ந்தேதி மொகாலில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் 4 பேர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கின்றனர். ஷேன் வாட்சன், ‌ஜேம்ஸ் பட்டிசன், உஸ்மான் குவாஜா, ஜான்சன் ஆகியோர் நீக்கப்பட்டோர் ஆவர். அணியின் சக வீரர்களுக்கு இவர்கள் 4 பேரும் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற காரணத்தால் நீக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலியா அணியின் தேர்வுக் குழு அறிவித்திருக்கிறது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: