சிகாகோ: அமெரிக்காவில் எச்ஐவி பாதிப்புடன் பிறந்த பெண் குழந்தையை குணப்படுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் மிஸிஸிப்பியில், எச்ஐவி பாதிப்புடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு எச்ஐவி பாதிப்புக்குள்ளாவோருக்கு தரப்படும் மருந்துகளையே கொடுத்து அதை சரி செய்துள்ளனராம் டாக்டர்கள்.
எச்ஐவி பாதித்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தை எச்ஐவி பாதிப்புடன் இருக்கும் என்பதாலேயே உறவு கொள்வதையும், குழந்தை பெற்றுக் கொள்வதையும் தவிர்த்து விடுவார்கள்.
அதையும் மீறி சில சந்தர்ப்பங்களில் எச்ஐவி பாதிப்புடன் குழந்தைகள் பிறந்து விடுகின்றன. பிறக்கும் போதே சாவின் தேதியை நிர்ணயித்துக் கொண்டு பிறக்கும் குழந்தைகள் எந்த ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள். அவர்கள் உயிர்வாழவைப்பதற்கு பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.