ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள இந்த உலகில் பெண்களுக்கு சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. இருப்பினும் உலகின் சில பகுதிகளில் பெண்கள் மிகவும் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் நாட்டின் கண்கள் என்று தான் சொல்கின்றனர். ஆனால் அனைத்து நாட்டிலுமே சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. மேலும் பெண் சுதந்திரமானது இருந்தாலும், எந்த ஒரு பெண்ணாலும், இரவில் தனியாக நடக்க முடியாத நிலை இன்றும் நிலவுகிறது. இருப்பினும் உலகில் பெண்களுக்கு எந்த ஒரு அநியாயமும் நடக்காத வகையில், சரியான பாதுகாப்பை அளிக்கும் வகையில் ஒரு சில நகரங்கள் உள்ளன.
இப்போது பெண்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் மகளிர் தினத்தில், பெண்களுக்கு பாதுகாப்பையும் மதிப்பையும் அளிக்கும் நகரங்கள் என்னவென்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். இவற்றில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் தான் இருக்கின்றன. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த பட்டியலில் ஒரு இந்திய நகரம் கூட, பெண்களுக்கு பாதுகாப்பை தரும் வகையில் இல்லை என்பது தான்.
சரி, இப்போது உலகில் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் நகரங்கள் எவையென்று பார்த்து, வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த புனித நகரங்களுக்கு சென்று வாருங்கள்.
அரபு நாடுகள்
பொதுவாக அரபு நாடுகள் என்றாலே அங்குள்ள பெண்களுக்கு நிறைய பாதுகாப்புகள் இருக்கும். அதிலும் இந்த நகரத்தில் பெண்கள் எந்த ஒரு மார்டன் உடையையும் அணிந்து செல்ல இயலாது. எனவே இதுவும் பெண்களுக்கான நகரம் ஆகும்.
கோபன்ஹேகன், டென்மார்க்
உலகிலேயே டென்மார்க் மிகவும் பாதுகாப்பான நாடு. அதிலும் அந்த நாட்டில் உள்ள மிகச் சிறிய நகரமான கோபன்ஹேகனில், பெண்கள் சுதந்திரமாக எந்த நேரத்திலும் செல்லும் அளவில் பாதுகாப்பானது உள்ளது.
ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
இந்த நகரத்தில் விபச்சாரத்தையே சட்டப்பூர்வமாக அமல்படுத்தியிருப்பதால், இங்கு கணிசமான அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு நிச்சயம் இருக்கும் என்ற விவாதம் நிலவுகிறது.
ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்
ஸ்வீடன் நாட்டில் உளள ஸ்டாக்ஹோம் நகரமும் ஒரு பாதுகாப்பான நகரம் ஆகும். ஏனெனில் ஸ்வீடன் நாட்டில் உள்ள அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்காக ஒரு சிறந்த கொள்கையை கொண்டுள்ளது. அது என்னவென்றால், பெண்கள் மகப்பேறுவிற்கு நீண்ட கால விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்பதே. எனவே தான் இந்த நகரமும் பெண்களுக்கான ஒரு சிறந்த பாதுகாப்பான நகரமாக உள்ளது.
ஜூரிச், சுவிச்சர்லாந்து
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் ஒரு திறந்த நகரம். பொதுவாகவே சுவிட்சர்லாந்து வரலாற்று அடிப்படையில் மிகவும் அமைதியானது. அந்த நாட்டில் உள்ள ஜூரிச் நகரம் அனைவருக்குமே ஒரு சிறந்த பாதுகாப்புடன் கூடிய, மகிழ்ச்சியைத் தரும் நகரமாக உள்ளது.
வியன்னா, ஆஸ்திரியா
இந்த நகரத்தில் எந்த ஒரு இளம் தம்பதியரும் பயமின்றி, சுதந்திரமாக எந்த நேரமும் நடந்து செல்ல முடியும். அந்த அளவில் அந்த நகரம் பாதுகாப்பான ஒன்று.
சிங்கப்பூர்
சிங்கப்பூரின் பாதுகாப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஏனெனில் தெருவில் ஒரு பேப்பரைப் போட்டாலே, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விடுவர், அந்த அளவு அங்கு சட்டமானது மிகவும் கடுமையாக இருக்கும். எனவே அத்தகைய ரோட்டையே சுத்தமாக வைத்துக் கொள்ள நினைக்கும் அந்த நகரத்தில் வாழும் பெண்களுக்கு மட்டும் எப்படி பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்.
சியோல், தென் கொரியா
சியோல் ஒரு தொழில்முறை மற்றும் நிபுணத்துவ நகரம். இத்தகைய நகரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் போதும் சரி, மற்ற நேரங்களிலும் சரி, சரியான பாதுகாப்பு இருக்கும்.
முனிச், ஜெர்மனி
பெண்கள் வேலை செய்வதற்கு ஒரு சிறந்த நகரம் என்றால், அது ஜெர்மனியில் உள்ள முனிச் தான். இந்த நகரத்தில் உள்ள போக்குவரத்தானது மிகவும் பாதுகாப்பானது.
டோக்கியோ, ஜப்பான்
உலகின் பரபரப்பான மற்றும் விலையுயர்ந்த நகரம் என்றால் அது ஜப்பானில் உள்ள டோக்கியோ தான். இந்த நகரத்தில் வேலை செய்யும் பெண்கள், வேலை செய்யும் போது பாதரம் கலந்த மருந்து ஒன்றை வைத்துக் கொண்டு இருப்பதால், இந்த நகரமும் ஒரு பாதுகாப்பான நகரம் ஆகும்.
