இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ரிசர்வ் படை கான்ஸ்டபிள் ஒருவர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்த மாணவியை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து அவரை கற்பழித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசம் மாநிலம் லாங்டிங் மாநிலத்தில் உள்ள சர்க்யூட் ஹவுஸ் அருகே கடந்த 2ம் தேதி சிறுமி ஒருவர் சுயநினைவின்றி கிடந்தார். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று தான் நினைவு திரும்பியது.
அவரை விசாரித்தபோது, இந்திய ரிசர்வ் படை கான்ஸ்டபிளான லுக்பாம் யோங்கம் என்பவர் தன்னை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து கற்பழித்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து லுக்பாமை உள்ளூர் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். லுக்பாமை தண்டிக்கக் கோரி உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தில் கூடினர்.
மேலும் மருத்துவ பரிசோதனைக்காக லுக்பாமை அழைத்துச் செல்லும்போது காவல் நிலைய வாசலில் கூடியிருந்த மக்கள் அவரைத் தாக்கினர். இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர்.