இண்டேன் வாடிக்கையாளர் புகாருக்கு புதிய தொலைபேசி வசதி

சென்னை: காஸ் கசிவு குறித்து, வாடிக்கையாளர்கள் புகார் செய்ய, கட்டணமில்லா தொலைபேசி வசதியை, ஐ.ஓ.சி., துவங்கி உள்ளது. இண்டேன் நிறுவன வாடிக்கையாளர்கள், சமையல் காஸ் சிலிண்டர் கசிவு உள்ளிட்ட புகார்களை, அவர்களின், முகவர் நிறுவனத்திடம் அளித்து வருகின்றனர். இதற்காக, மூன்று அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்கள், காஸ் கசிவு தொடர்பாக, எந்த நேரத்திலும் புகார் செய்யலாம்.

மாநில அளவிலான கட்டணமில்லா தொலைபேசி வசதியை, ஐ.ஓ.சி., நிறுவனம் துவங்கியது. 1800-425-247-247 என்ற இந்த தொலைபேசி எண், வார நாட்களில், மாலை, 5:00 மணி முதல், மறுநாள் காலை, 9:00 மணி வரையிலும், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில், 24 மணி நேரமும் செயல்படும். வாடிக்கையாளர்கள், தங்களின் இணைப்பு எண் உள்ளிட்ட, அடிப்படை தகவல்களுடன், தங்கள் புகாரை, இந்த எண்ணில் தெரிவித்தால், அதன் மீது, உடனடியாக, நடவடிக்கை எடுக்கப்படும். காஸ் கசிவு அல்லாத பிற புகார்களை, வாடிக்கையாளர்கள் வழக்கம் போல், தங்கள் வினியோகிஸ்தர்களிடம் தெரிவிக்க வேண்டும். இத்தகவலை, ஐ.ஓ.சி., நிறுவன நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: