தாய்பே: தைவானில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 20 பேர்வரை காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஆசிய நாடான தைவானின் மத்தியப் பகுதிக்கு அருகே, பூமிக்கு அடியில் 15 கிலோமீட்டரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகிவுள்ளதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. உயிர் மற்றும் பொருள் இழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை எனினும் 20 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறியனர். நில நடுக்கத்தின் போது லிப்ட்டில் மாட்டிக்கொண்டவர் அச்சமடைந்தனர்.
தைவான், நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் பகுதியில் உள்ளது. இதனால் இந்நாட்டில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. கடந்த 1999-ம் வருடம் 7.2 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் தாக்கியது. இதில் 2400 பேர் இறந்தனர், மேலும் 50 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.