ஆண்களுக்கான சில கோடைகால சரும பராமரிப்புக்கள்!!!

கோடைகாலத்தின் போது பெண்களை விட ஆண்களுக்குத் தான் சரும பராமரிப்பானது அதிகம் தேவைப்படுகிறது. ஏனெனில் அவர்கள் தான் அதிக நேரம் வெயிலில் அலைந்து, வேலை செய்கிறார்கள். சாதாரணமாகவே ஆண்கள் சருமத்தை அதிகம் பராமரிக்கமாட்டார்கள். அதிலும் வெளியே வேலை செய்துவிட்டு, வீட்டிற்கு வந்தால், சுத்தமாக அழகைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். இதனால் அவர்களது சருமம் பொலிவிழந்து, வறட்சியோடு, சுருக்கங்களாக காணப்படும். 

மேலும் மற்ற நாட்களை விட, கோடைகாலத்தில் வெயிலின் தாக்கமானது அதிகப்படியாக இருப்பதால், சருமத்தை கவனிப்பது என்பது முக்கியமான ஒன்றாகிறது. ஏனெனில் சூரியக் கதிர்கள் அதிகப்படியாக சருமத்தில் பட்டால், சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால், சரும செல்கள் பாதிப்படைந்து, பின் சரும புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே சரும பராமரிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. குறிப்பாக ஆண்களுக்கு மிகவும் இன்றியமையாதது. 

எனவே தற்போது ஆண்களின் நேரத்தை வீணாக்காமல், எளிதில் சருமத்தைப் பராமரிக்கும் வகையில் ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதனை தவறாமல் கோடைகாலத்தில் செய்து வந்தால், அழகாக காணலாம். 

முகத்தை கழுவுவது 

வெளியே வெயிலில் சென்று வீட்டிற்கு வந்ததும், மறக்காமல் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகளை அடைத்துக் கொண்டிருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

சன் ஸ்கிரீன் 

வெயிலின் தாக்கத்தினால் சருமச் செல்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கு, வெளியே செல்லும் போது மறக்காமல் சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும்.

தண்ணீர் 

கோடைகாலத்தில் உடல் வறட்சி அதிகம் ஏற்படும். எனவே நன்கு அழகாகக் காணப்படுவதற்கு, அதிகப்படியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் குறைந்தது 7-8 டம்ளர் தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும்.

ஷேவிங் 

ஆண்கள் மறக்காமல் கோடைகாலத்தில் செய்ய வேண்டிய ஒன்று தான் ஷேவிங். மேலும் ஷேவிங் செய்த பின், தவறாமல் மாய்ச்சுரைசரை தடவ வேண்டும். ஏனெனில் ஷேவிங் கிரீமானது வறட்சியை ஏற்படுத்தும். எனவே ஷேவிங் செய்து, மாய்ச்சுரைசர் தடவுவது அவசியம். ஷேவிங் செய்யாமல் இருந்தால், பின் அவை முகத்தில் பருக்களை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது.

மைல்டு சோப்பு 

குளிக்கும் போது அதிக நறுமணம் உள்ளது என்று கெமிக்கல் கலந்த சோப்புக்களை பயன்படுத்தாமல், மைல்டு சோப்புக்கள பயன்படுத்த வேண்டும். இதனால் மைல்டு சோப்புக்கள் வறட்சியை ஏற்படுத்தாமல் இருக்கும். இல்லையெனில் கெமிக்கல் சோப்புக்கள் சருமத்தில் உள்ள எண்ணெயை முற்றிலும் நீக்கி, வறட்சியை உண்டாக்கி, சருமத்தில் உள்ள எண்ணெயை முற்றிலும் நீக்கி, வறட்சியை உண்டாக்கி, சருமத்தில் அரிப்புக்களை உண்டாக்கிவிடும்.

மாய்ச்சுரைசர் மாய்ச்சுரைசரில் வைட்டமின் ஈ அதிகம் இருக்கும். அதிலும் கற்றாழையால் ஆன மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தினால், அவை சன் ஸ்கிரீனை விட இரண்டு மடங்கு அதிக பாதுகாப்பை தரும்.

ஃபேஷியல் 

அதிகப்படியான வெயில் சருமத்தில் படுவதால், சருமம் பொலிவிழந்து, காணப்படும். எனவே சருமத்தை பொலிவுடன் வைப்பதற்கு, அவ்வப்போது ஃபேஷியல் செய்ய வேண்டும்.

ஸ்கரப் 

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு வாரத்திற்கு ஒரு முறை ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, நன்கு இளமையான தோற்றம் கிடைக்கும். எனவே அந்த ஸ்கரப்பிற்கு சர்க்கரை அல்லது உப்பை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் ஆயில் 

வெயில் காலத்தில் சருமத்தை பராமரிக்க செய்ய வேண்டிய செயல்களில், ஆலிவ் ஆயில் கொண்டு தினமும் மசாஜ் செய்வது முக்கியமானது. இதனை ஆண்கள் தினமும் இரவில் படுக்கும் போது செய்து படுத்தால், முகம் நன்கு புத்துணர்ச்சியுடனும், பொலிவுடனும் இருக்கும்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: