இடைவிடாமல் சிரித்துக் கொண்டிருக்கும் அதிசய சிறுவன்


புன்னகை, சிரிப்பு ஆகியவை மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அருமருந்தாகும். ஆனால் அதுவே அளவுக்கு மீறும்போது தொல்லை கொடுக்கும். அதுபோல இங்கிலாந்து நாட்டில் வடக்கு வேல்ஸ் பகுதியில் வசிக்கும் ஜேம்ஸ் எடெகார்ஸ்(11) என்ற சிறுவன் அவதிப்படுகிறான். இவன் பிறந்த நாள் முதல் இப்போது வரையில் எந்த நேரமும் உரக்க சிரிப்பதும், புன்னகை தவழ்ந்தபடியுமே இருக்கிறான். இவனால் வாய் பேச முடியவில்லை.
இதனால் தனது தேவைகள், உணர்வுகளை ஐபேடு மூலம் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்கிறான். இந்த சிறுவனின் தாய் ராஷெல் கூறும்போது, ‘அவன் ஒரு மகிழ்ச்சியான, பாசமுள்ள குழந்தையாக இருப்பது எங்களுக்கு சந்தோஷம். ஆனால் ஆபத்தான விசயங்கள்  உணரும் சக்தி அவனுக்கு இல்லை. எனவே அவனை நாங்கள் கண்காணிக்க வேண்டியிருக்கிறது’ என்கிறார்.
இது பிறவியிலே நரம்பியல் கோளாறினால் ஏற்படும் நோய் என்று கூறும் மருத்துவர்கள், நாடு முழுவதும் இவ்வாறு சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு புள்ளி விபரம் தருகிறார்கள்.
அதுமட்டுமல்ல 17 மாத குழந்தை முதல் இவனை விசேஷ  படுக்கையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து வருகிறார்கள். இதற்கான செலவுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்று, சுமார் ரூ.1¼ லட்சத்தை வழங்குகிறது. இதை விரைவில் ரூ.2½ லட்சமாக உயர்த்தவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: