சவுதி அரேபியாவில் தீ விபத்து: ஏழு இந்தியர்கள் உயிரிழந்தனர் !

ரியாத்: சவுதி அரேபியாவில் ஹைல் நகருக்கு அருகில்  ஆயன் என்ற இடத்தில் நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில்  இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களில் சித்தீக், குட்டன், லாலு உள்ளிட்ட ஆறு நபர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பெருந்தலமன்னா மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.

இந்நிறுவனம் கேரள மாநிலம் எடக்கரா பகுதியை சேர்ந்த சாஜி என்பவருக்கு சொந்தமானது. இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: