தோழின் மனதை கவர கத்திக்குத்து நாடகம்



தோழியை காதலியாக்க கத்திக்குத்து நாடகம்அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜோன்ஸ் போரோ நகரைச் சேர்ந்தவர் ஜெப்ரி டைகர் சீகல். இவர் தன் தோழியின் மனதைக் கவர முடிவு செய்தார்.
அதன்படி, அப்பெண்ணுடன் நடந்து செல்லும் வழியில், தன் நண்பரை கத்தியுடன் வருமாறு கேட்டுக்கொண்டார். திட்டத்தின்படி சாலையில் திடீரென வழிமறித்த "மர்ம நபர்" கத்தியைக் காட்டி அப்பெண்ணை தன்னிடம் விட்டு ஓடிவிடுமாறு மிரட்டினார்.
ஜெப்ரி சினிமா கதாநாயகன் போல், அந்த நபருடன் சண்டை போடத் துவங்கும் முன் அவரது தோழி அலறியடித்து ஓட்டம் பிடித்தார். திட்டம் தோல்வி அடைந்தாலும் சமாளிக்க எண்ணிய அவர் தன் உடலில் சிறு காயங்கள் ஏற்படுத்திக் கொண்டார். அவரது நண்பரும், கத்தியுடன் ஓடி மறைந்தார்.
இதற்கிடையில் அப்பெண் போலிசை தொடர்பு கொண்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார் சல்லடை போட்டு தேடியும் குற்றவாளி கிடைக்கவில்லை.
விசாரணையில் உண்மை வெளிவந்தது. இருவரும் நடந்து சென்றபோது, ஜெப்ரி தன் நண்பருக்கு மொபைலில், மெசேஜ் அனுப்பியதை ஒப்புக் கொண்டார்.
தன் தோழியின் மனதை எப்படியாவது கவர வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு செய்ததாகக் கூறிய ஜெப்ரி மீது பரிதாபப்பட்டு போலிசார் வழக்கு தொடராமல் அவரை மன்னித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: