2 பேர் பயணம் செய்வதற்கு வசதியான புதிய கான்செப்ட் மாடல் எலக்ட்ரிக் வாகனத்தை ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைத்துள்ளது டொயோட்டா. பின்புறத்தில் ஒரு வீலும், 2 வீல்களும் கொண்டிருக்கும் இந்த வாகனத்துக்கு ஐ-ரோடு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. வளைவுகளில் திரும்பும்போது இந்த வாகனம் கவிழாமல் செல்லும் வண்ணம் செல்ஃப் பேலன்சிங் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது.
2 பேர் முன்னும், பின்னும் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் வாகனம் என்பதால் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காது. போக்குவரத்து நெரிசல் மிக்க நகர்ப்புறங்களில் தனிநபர் பயன்பாட்டு வாகனமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்குடன் இந்த கான்செப்ட் மாடலை காட்சிக்கு வைத்திருக்கிறது டொயோட்டா. இந்த வாகனத்தை காட்சிக்கு வைப்பதற்கு முன் டொயோட்டா வெளியிட்ட அதிகாரப்பூர்வ படங்களின் தொகுப்பு.










