தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்…. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

 Tn Budget Session Starts Tomorrow சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நிதிஅமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2013-14 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தமிழகத்திற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் மார்ச் 21ம் தேதியே 2013-14 ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை காலை 10.30 மணிக்கு கூடுகிறது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 

பட்ஜெட் தாக்கல் செய்து வாசித்து முடிக்கப்பட்டதும் அன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.பின்னர் நண்பகலில் சபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் கூடுகிறது. இதில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நாட்களில் என்னென்ன மானிய கோரிக்கைகளை கொண்டு வந்து நிறைவேற்றுவது என்று முடிவு செய்து அறிவிப்பார். 

வருகிற திங்கட்கிழமையில் இருந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் விவாதத்திற்கு பிறகு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார். இதன் பிறகு, மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும். துறை வாரியாக மானிய கோரிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதம் நடைபெறும். இந்த கூட்டத் தொடர் மே மாதம் வரை 45 நாட்கள் சட்டசபை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: