ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது எப்படி?









உடல்நலம் சார்ந்த நோய்கள்,உணவு முறைகளால் உருவாவது மட்டுமல்லாமல், உடல் எடையையும் பாதிக்கிறது மற்றும் அவை உடல்நல பாதிப்புகளையும் அதிகரிக்கிறது. ஆகவே அதற்கு சத்தான உணவுகளை சாப்பிட முடிவெடுப்பது எளிது. ஆனால் செயல்படுத்துவது தான் மிகவும் கடினம். ஏனெனில் குறைந்த ஆரோக்கியமுள்ள உணவை உண்பது ஆவலை மேலும் தூண்டுவதாக உள்ளது.

ஆகவே டயட்டில் இருக்கும் போது எப்படி ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது என்று ஒருசில டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. முதலில் எது ஆரோக்கியமான உணவு மற்றும் எப்படி அதை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

2. வெவ்வேறு நிறத்தில் உள்ள பல்வேறு வித்தியாசமான உணவை சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் பல்வேறு உணவுகள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை தரும். மேலும் அத்தகைய உணவுகளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன.

3. காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க செல்லும் போது, கூடையில் முடிந்த அளவு பல்வேறு நிறங்களை உடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டும். உதாரணமாக, பழத்தை தேர்வு செய்யும் போது வாழைப்பழம், அவுரிநெல்லிகள் (ப்ளூபெர்ரி), ஆப்பிள்கள், ஆரஞ்சுகள் மற்றும் அன்னாசி பழங்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் பல நிறங்கள் என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது காய்கறிகளுக்கும் பொருந்தும்.

4.நொறுக்கு தீனி சாப்பிட நினைக்கும் போது சத்தானவற்றை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். எடையை குறைப்பதற்காக நொறுக்குத் தீனியை உண்ணாமல் இருக்க வேண்டாம். உண்மையில் சரிவிகித உணவை உண்ணும் முறையில் நொறுக்குத் தீனி உண்பது சற்று நல்லது.

குறிப்புகள்:

பொதுவாக நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பும் போது, பிஸ்கட் அல்லது எண்ணெயில் பொரித்த பண்டங்களைத் தேர்வு செய்வோம். ஆனால் அவற்றிக்குப் பதிலாக நட்ஸ், விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். அதன் வாயிலாக உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, அடுத்த நேர உணவு உட்கொள்ளும் நேரம் பசியெடுக்காமல், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: