உலகின் மிகச் சிறிய ஆசிரியர்!...


இந்தியாவில், ஹரியான மாநிலத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் அசாத் கணனித்துறையில் ஆசிரியர்ராக பணியாற்றி வருகின்றார். அசாத்திற்கு தற்போது 22 வயது ஆனாலும்கூட 10,11 வயது  நிறையுடவராகவும் 7 வயதினருக்குரிய ஆடையை அணிபவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இவர் 5 வயதாக காணப்படும்போது ஹார்மோன் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது வளரச்சி தடைப்பட்டுள்ளது. குடும்பத்தின் வறுமைநிலைக் காரணமாக இவருக்கான மருத்துவ வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளது. 
சர்க்கஸ் குழுவொன்றினால் தான் சிறுவயதிலே கடத்தப்பட்டதாக இவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கணனித்துறை ஆசிரியர்ராக இவர் தற்போது மாதம்  10,000 ரூபாய்களை வருவயாக பெற்று வருகிறார்.
கல்லூரி மாணவர்கள் இவரை 'லிட்டல் ஸ்டார்' என செல்லமாக அழைத்து வருகின்றனர். 'நான் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் எப்போதும் எதை விரும்பினேனோ தற்போது அதை அடைந்துள்ளேன்' என அவர் தெரிவித்துள்ளார்.  அசாத் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது தாயார் பார்வதி தெரிவித்துள்ளார். 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: