படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. இப்போது படத்துக்காக 6வது பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் யுவன். இது படத்தின் புரமோஷனுக்கான பாடல். விஜய் டிவியின் லிட்டில் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற ஆஜித் இந்த பாடலை பாடியுள்ளார்.
"ஸ்டாப் தி பாட்டு..." என்று துவங்கும் இந்தப் பாடல்களை தற்போது ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். விரைவில் தொலைக்காட்சியில் காணலாம். படத்தின் காட்சிகளுடன் ஆஜித் பாடுவதும் வீடியோ ஆல்பத்தில் இடம்பெறும். ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.