மாணவர்கள் போராட்டம் எதிரொலி: திருவனந்தபுரத்துக்கு போகிறது சென்னை இலங்கை தூதரகம்

சென்னை: இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் மாணவர் போராட்டத்தின் எதிரொலியாக சென்னையில் செயல்பட்டு வரும் இலங்கை துணை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

ஈழத்தில் இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு வார காலத்துக்கும் மேலாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து டெல்லியில் செயல்பட்டு வரும் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி ரொஹான் டயஸ் திடீரென கொழும்புக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: