மலையிலிருந்து உருண்டு விழும் பேருந்தின் நேரடிக்காட்சி



பொலிவியா நாட்டில் உள்ள கரடுமுரடான மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென நிலை தடுமாறி பள்ளத்துக்குள் விழுந்துள்ளது.
இப்பேருந்தின் சாரதி ஆபத்தான குறுகிய பாதையில் பயணிக்க வேண்டி இருந்ததால் பயணிகளை இறக்கி விட்டு துணிச்சலுடன் தனியே பேருந்தை எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனாலும் கடுமையாக மழை பெய்து பாதை சேறும், சகதியுமாக காணப்பட்டதால் துரதிஷ்டவசமாக பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பயணிகள் வீதி ஓரத்தில் நின்று பயத்தில் கூக்குரலிடுகின்றனர்.
38 மைல்கள் நீளமான இந்தப் பாதையில் வருடத்துக்கு 300க்கு மேற்பட்டோர் மரணத்தை தழுவுகின்றனர். கடந்த 1995 ஆம் ஆண்டு "உலகின் மிக ஆபத்தான சாலை" என்று அமெரிக்க அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் இடம்பெற்ற இந்த கோர விபத்தில் பலியான சாரதியைத் தவிர பேருந்தில் பயணம் செய்த சுமார் ஐம்பது பயணிகளும் இறங்கியிருந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்
manithan
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: