பகவத் கீதையை தடை செய்யாமல் ஓயப்போவதில்லை - ரஷ்ய போராட்டக்காரர்கள் அறிவிப்பு!

மாஸ்கோ: சமூக அமைப்பில் பிரிவினையை தூண்டும் வகையில் இஸ்கான் அமைப்பால் வெளியிடப்பட்ட பகவத் கீதையை ரஷியாவில் தடை செய்யாமல் ஓயப்போவதில்லை என்று கிறிஸ்டியன் ஆர்த்தோடாக்ஸ் சர்ச் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ரஷியாவின் டோம்ஸ்க் நகரில் பகவத் கீதைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இருப்பினும் அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய புதன்கிழமை வரை அனுமதியும் அளித்திருந்தது.

இந்நிலையில் டோம்ஸ்க் நீதிமன்றத்தில் நேற்று வரை மேல்முறையீடு செய்யப்படவில்லை. டோம்ஸ்க் நீதிமன்றத்தைவிட மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து பகவதக் கீதைக்கு தடை வாங்கியே தீருவோம் என்று கிறிஸ்டியன் சர்ச் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

பகவத் கீதைக்கு தடையா? என பொங்கியெழுந்த இந்து அமைப்பினரின் வேண்டுகோளை ஏற்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ரஷியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து சாதகமாக தீர்ப்பை பெற்றுத் தந்தார். இருபபினும் பிரச்சினை முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.

tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: