பெரும் போலீஸ் படை பாதுகாப்புடன் மோடி நடத்திய உண்ணாவிரத நாடகம் !

Sadbhavana_mission கோத்ரா:ஸத்பாவனா உண்ணாவிரத தொடரின் ஒரு பகுதியாக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி பாதுகாப்புடன் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அரங்கேற்றினார். கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடைபெற்று 10-வது ஆண்டு நிறைவுற இன்னும் ஒரு மாதம் மீதமிருக்கையில்
உண்ணாவிரதத்தை மோடி நடத்தியுள்ளார்.
அதேவேளையில், அமைதி, மத நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக படுகொலைச் செய்த காவி வெறியாட்டத்திற்கு தலைமை தாங்கிய மோடி உண்ணாவிரதம் இருப்பதை எதிர்த்து அனுமதியின்றி கூட்டம் நடத்த முயன்றதாக குற்றம் சாட்டி சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி உள்ளிட்ட 5 பேரை மோடியின் போலீஸ் கைது செய்தது.
இனப்படுகொலைக்கு பலியானவர்களுக்கு நீதிக்கோரி கூட்டம் நடத்த முயன்றதால் இவர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
மாநில ரிசர்வ் போலீஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத பந்தலுக்கு காலை 11 மணிக்கு நரேந்திர மோடி வந்தார். அவரை அவரது அமைச்சரவை சகாக்கள் வரவேற்றனர். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இத்துடன் பல்வேறு மதத்தைச் சேர்ந்த மத குருமார்களும் பந்தலுக்கு வந்து மோடியை வாழ்த்தினர். இதற்காக இப்போது 1,600 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் சிறப்பு பயிற்சி பெற்ற 50 சேதக் கமாண்டர்களும் மேடையிலும், சுற்றுப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
asiananban
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: