புதிய அம்சங்களுடன் நானோ காரை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்


இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் பல புதிய மாற்றங்களுடன் நானோ காரை அறிமுகப்படுத்த உள்ளது டாடா மோட்டார்ஸ்.

பெரும் எதிர்பார்ப்புடன் நானோ காரை கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் நானோ காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.

ஆனால், கடந்த இரண்டரை ஆண்டில் நானோ கார் விற்பனையில் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

நானோ விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நானோ காரில் பல புதிய மாற்றங்களை செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

சொகுசாகவும், அழகாகவும் புதிய இருக்கைகள், முன்பக்க இருக்கையில் ஹெட்ரெஸ்ட், பியேஜ் டேஷ்போர்டு ஆகிய உள்பக்கத்தில் பல மாற்றங்கள் கண்டுள்ளது நானோ.

மேலும், காரின் இடதுபுறத்திலும் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க வசதியாக ரியர் வியூ கண்ணாடி, ப்ளோர் மேட்டுகள் என கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளது.

வீல் கேப்பும் புதிய டிசைன் கொண்டதாக பார்க்க பளிச்சென்று கவரும் வகையில் இருக்கிறது.

ஸ்டீரியங் வீலும் தொழில்நுட்ப ரீதியில் மாற்றம் கண்டுள்ளதால் டிரைவிங்கில் அலுப்பு இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடி பேனல்களும் முன்பைவிட அதிக உறுதியுடனும், இணைப்புப் பகுதிகளில் இடைவெளி இல்லாமலும் இருக்கும் வகையில் மறு வடிவமைப்பு பெற்றுள்ளது.

சொகுசாக இருக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் கொண்ட சஸ்பென்ஷனுடன் வருவதால் அதிர்வுகள் வெகுவாக குறையும்.

தவிர, எஞ்சின் பவரையும் கூட்டியுள்ளது டாடா மோட்டார்ஸ். தற்போது நானோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் 3 சிலிண்டர் எஞ்சின் 35 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆனால், புதிய நானோ 10 சதவீதம் அளவுக்கு(38பிஎச்பி) கூடுதல் திறனை வெளிப்படுத்தும்.

மேலும், நானோ கார் பியர்ல் ஒயிட், ஆரஞ்ச் மற்றும் பச்சை நிற வண்ணங்களில் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் வரும் நானோ விற்பனையிலும் நல்ல வளர்ச்சி காணும் என்று டாடா நம்புகிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: