மும்பை: ஐஐடி மாணவர்களின் விந்தணுக்கள் தேவை என்று சென்னையில் உள்ள தம்பதி விளம்பரம் தந்துள்ளனர்.அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விளம்பரம் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
ஐஐடியில் படிக்கும் புத்திசாலியான, ஆரோக்கியமான, உயரமான, அழகான மாணவர்களின் விந்தணுக்கள் தேவை. அதற்கு சன்மானமாக 20,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்ணும், இ-மெயில் முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி, ஐஐஎம் போன்றவைகளில் படிக்கும் மாணவர்களின் விந்தணுக்களை பெற்று புத்திசாலித்தனமாக குழந்தைகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.
Read: In English
இந்த விளம்பரம் ஐஐடி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாணவர்கள், ஐஐடியில் படிப்பவர்கள் மட்டும் புத்திசாலிகள் அல்ல. இது முட்டாள்தனமான விளம்பரம் என்று கூறியுள்ளனர்.டைம் ஆப் இந்தியா நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
tamil.oneindia