ஸ்ட்ரைக் செய்தால் கையை வெட்டுவேன் : அமைச்சரின் ஆவேசம் !


வேலைநிறுத்தம்  செய்ய திட்டமிட்டால், அந்த மருத்துவர்களின் கைகளை வெட்டிவிடுவேன்" என்று பிகார் சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் எச்சரிக்கை விடுத்தது கடும் கண்டனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததால் தனது கருத்தை பின்னர் அவர் திரும்பப் பெற்றார்.
பீகாரில், படிகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரி ஜனவரி 31-ம் தேதியில் இருந்து வேலைநிறுத்தம் செய்யவிருப்பதாக
புதிய மருத்துவர்கள் அறிவித்திருந்தினர்.
அதற்குத்தான் அமைச்சர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு இந்திய மருந்தியல் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தம் குறித்து அவர் கூறுகையில், "மருத்துவமனைகளை நடத்தவிடாமல் தடுக்க உங்களுக்கு யார் தைரியம் கொடுத்தது? அதை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன். பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றால் உங்களின் கைகளைக்கூட வெட்டுவேன்" எனக் குறிப்பிட்டார்.
எனினும், அவருக்கு எதிர்ப்புகள் எழுந்ததும் "நான் கைகளை வெட்டுவேன் என்ற அர்த்தத்தில் கூறவில்லை" என்று அமைச்சர் அஷ்வினி குமார்  பின்னர் விளக்கம் அளித்தார்
asiananban
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: