சசிகலாவின் தம்பி திவாகரன் மீது போலீசில் பரபரப்பு புகார்

Divakaran திருவாரூர்: சசிகலாவின் தம்பி திவாகரன் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் திருவாரூர் எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது ரிஷியூர் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், "எனக்கு கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ஆர்வன், அரசு தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்திருந்தார். அந்த வீட்டை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலாவின் தம்பி திவாகரனின் ஆட்களும், அவருக்கு துணையாக அரசு அதிகாரிகளும் வந்து கோயில் நிலத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது என்று கூறி, எனது வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர்.

இது குறித்து அப்போதே முதல்வரிடம் தபால் மூலம் புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மீது போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது. புகாரில் உண்மை இருப்பின் திவாரகன் கைது உறுதி என்றும், புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை எனில் இந்த புகார் வழக்கம் போல் கிடப்பில் போடப்படும் என்றும் கூறப்படுகின்றது.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: