எப்படி நாட்டை ஏமாற்றலாம் நீங்கள்?-பிரதமருக்கு அன்னா கேள்வி!

Anna Hazare டெல்லி: வலுவான லோக்பால் கோரி நடந்து வந்த போராட்டம் பிசுபிசுத்துப் போய் விட்ட நிலையில் ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் வாய் திறந்துள்ளார் அன்னா ஹஸாரே. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எப்படி நாட்டை நீங்கள் ஏமாற்ற முடிந்தது என்று கேட்டுள்ளார் அன்னா.

கடந்த டிசம்பர் மாதம் தான் தொடங்கிய 3 நாள் உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பினார் ஹஸாரே. அன்று முதல் அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில், பிரதமருக்கு அவர் ஒரு கடிதம் எழுதி தனது மெளனத்தைக் கலைத்துள்ளார்.

கடிதத்தில் அவர் கூறுகையில், வலுவான லோக்பால் மசோதா விவகாரத்தில் நாட்டை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். அரசு கொண்டு வந்துள்ள மசோதா உண்மையிலேயே வலுவானதுதானா? நாட்டை எப்படி உங்களால் ஏமாற்ற முடிந்தது?

வலுவான லோக்பாலை கொண்டு வாருங்கள். இந்த நாடு என்றென்றும் உங்களை பாராட்டும், நினைவு கூறும்.

நாடாளுமன்றத்தையே இந்த அரசு கட்டுப்படுத்தி வைத்திருப்பது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் ஹஸாரே.

இந்தக் கடிதத்தின் நகலை ராகுல் காந்தி, பாஜக தலைவர் நிதின் கத்காரி, உ.பி. முதல்வர் மாயாவதி ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார் ஹஸாரே.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: