டேராடூனில் ஹஸாரே குழுவினர் மீது செருப்பு வீச்சு!

டேராடூன்: உத்தரகண்டில் காங்கிரசுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஹஸாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட குழுவினர் மீது செருப்பு வீசினர் பார்வையாளர்கள்.

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறிய காங்கிரஸ் அரசை கண்டிக்கும் விதமாகவும் லோக்பால் தேவை பற்றி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலும் அன்னா ஹசாரே குழு உறுப்பினர்கள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர் .

இந் நிலையில் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் தங்கள் பிரச்சாரத்தை துவங்கினர். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் தனது காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அர்விந்த் கெஜ்ரிவாலை நோக்கி வீசினார். ஆனால் அந்த குறி தவறவிட்டது.

அர்விந்த் கெஜ்ரிவாலுடன் ,கிரண்பேடி உள்பட மற்ற உறுப்பினர்களும் உடன் இருந்தனர். முதல் செருப்பு இலக்கு தவறியதால் மற்றொரு செருப்பை கழற்றி வீச முனைந்தார்.உடனே உத்தரகண்ட் போலீசார் தாக்குதல் நடத்த முயன்றவரை கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரப்பரப்பு நிலவியது.

tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: