விசா காலத்திற்குப் பின்னும் தங்கிய இந்தியர்கள் நாடு திரும்ப சவுதி இந்தியத் தூதரகம் ஏற்பாடு

See full size image See full size image துபாய் : ஹஜ் யாத்திரை மற்றும் சுற்றுலாவிற்காக சவுதி அரேபியாவிற்குச் சென்று, அதற்கான காலம் முடிந்த பின்னரும், அங்கேயே தங்கிவிட்ட ஆயிரக்கணக்கானோரை, தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணியில், இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதர் எஸ்.டி.மூர்த்தி கூறியதாவது: சவுதி அரேபியாவில், ஹஜ் மற்றும் சுற்றுலாவிற்கு வந்து, காலம் கடந்த பின்னரும் தங்கியிருப்போர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். இவர்களை தாய் நாடு திருப்பி அனுப்பும் பணியில், இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளது. அதனால், அவ்வாறு சவுதியில் தங்கியிருப்போர், உரிய காலகட்டத்திற்குள், தூதரகத்தை அணுகி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக, 200 "அவுட்பாஸ்'கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மூர்த்தி தெரிவித்தார்.
விசாவுக்கான காலம் கடந்த பின்னரும் தங்கியிருந்த அனைவருக்கும், சவுதி அரசு பொது மன்னிப்பு அளித்துள்ளது. இவர்கள், 2010 செப்டம்பர் முதல் 2011 செப்டம்பர் வரையிலான கால கட்டத்திற்குள், தாய் நாடு திரும்ப வேண்டும் என, கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பொது மன்னிப்புக் காலத்தில், 15 ஆயிரம் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சவுதியில், விசா காலத்திற்கு பிறகும் தங்கியிருப்போருக்காக, ஜெட்டாவில் ஒரு அலுவலகத்தை அரசு அமைத்துள்ளது. அங்கு, அவர்கள் தத்தம் நாட்டு அதிகாரிகளை அணுகி, விசாவிற்காக விண்ணப்பிக்கலாம்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: