ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ-125 குடும்பங்கள் தப்பின !


Sharjah fireஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று தீப்பிடித்தது. இதனால் அங்கு தங்கியிருந்த 125 குடும்பங்கள் வீடுகள், சொத்துக்களை இழந்து தவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக அந்த குடும்பங்கள் உயிர் தப்பியுள்ளன. ஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக காலை 9.15 மணி அளவில் தான் தீயை அணைக்க முடிந்தது.

அதிகாலை 2.15 மணிக்கு ஏற்பட்ட தீ சீதோஷ்ன நிலை காரணமாகவும், காற்று காரணமாகவும் மளமளவென 25 மாடிகளிலும் பரவியது என்று ஷார்ஜா தீயணைப்பு துறை டைரக்டர் ஜெனெரல் பிரிகேடியர் அப்துல்லாஹ் சயீத் அல் சுவைதி தெரிவித்தார். இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் தங்கியிருந்த 125 குடும்பங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின. ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவிக்கின்றனர்.

37 வயதாகும் அஹம்து யாகூப் என்பவர் தன்னுடைய வீட்டில் 60,000 திர்ஹம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகவும், எலலாவற்றையும் புதிதாக வாங்க வேண்டும் என்றும், அதற்காக புகார் செய்யப் போவதாகவும் கூறினார்.

அறை எண் 805ல் இருந்த இஃபியானி டவ் என்பவர் தன்னுடைய குழந்தையை கையில் வைத்திருந்த சமயத்தில் தீ பிடித்த செய்தி பற்றி தெரிந்ததாகவும், அதனால் எல்லாவற்றையும் விட்டு விட்டு வீட்டை வெளியேறியதாகவும், தற்போது தன்னிடத்தில் உடுத்திய உடை மட்டும் தான் மிஞ்சியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தீயினால் பாதிக்கப்பட்டு விடுகளை இழந்த குடும்பங்கள் பல இடங்களில் பாதுக்காப்பாக தங்க வைக்கப்ப்ட்டுள்ளனர். ஷார்ஜா சாரிட்டியின் மேலாளர் சாலேஹ் அல் ஷுவைஹி அவர்கள் தங்களின் 24 தன்னார்வத் தொண்டர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகவும், 1000 திர்ஹம் முதல் 2000 திர்ஹம் வரை குடும்பத்தின் அளவை பொறுத்து நிதியுதவி செய்வதாகவும், அவர்களுக்காக வீடுகள் பார்க்கப்படுவதாகவும், இன்னும் ஓரிரு நாளில் அவர்களை வேறு வீடுகளில் குடியமர்த்த போவதாகவும் தெரிவித்தார்.
asiananban
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: