தடுப்பூசி மூலம் ரத்த மாதிரி எடுத்து ஒசாமாவை கண்டுபிடித்த சிஐஏ... உதவி செய்த பாக். டாக்டர்

Osama வாஷிங்டன்: ஒசாமா பின்லேடன் குறித்து பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் ஷகீல் அப்ரிதி தான் முக்கிய தகவல் கொடுத்ததாக அமெரிக்கா முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பெனட்டா, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இது ஞாயிறன்று ஒளிபரப்பாகிறது.

அபோதாபாத்தில் தங்கியிருப்பது ஒசாமாதான் என்பதை உறுதி செய்ய அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் டாக்டர் ஷகீல் அப்ரிதி தலைமையிலான மருத்துவர்களை வைத்து அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தடுப்பூசிகள் போட வைத்தது.

அவர்கள் தடுப்பூசி போடுவது போல சென்று வீடுகளில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து வந்தனர். அந்த ரத்த மாதிரிகளில் சிஐஏ மரபணு சோதனை நடத்தியது.

அப்போது ஒரு ரத்த மாதிரி, ஓசாமாவுடையது என்பது உறுதியானது. இதை வைத்தே அந்த வீட்டில் ஒசாமா பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

.இவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டி கைது செய்திருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்றும் பெனட்டா அதில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அபோதாபாத் வளாகத்தில் ஒசாமா தங்கியிருந்தது பற்றி பாகிஸ்தானுக்கு முன்பே தெரியுமா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும் பெனட்டா தெரிவித்துள்ளார்.

இதனிடையே அப்ரிதியை விடுவித்து அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் அப்ரிதி விவகாரத்தில் சுமூகத் தீவு காண முடியும் என்று பாகிஸ்தான் நம்புவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
.
tamil.oneindia  
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: