பாகிஸ்தானைச் சேர்ந்த 15 ராணுவ வீரர்களை, தலிபான்கள் சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சி ?



பாகிஸ்தானைச் சேர்ந்த 15 ராணுவ வீரர்களை, தலிபான்கள் சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பழிக்குபழியாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் வஜிரிஸ்தான் பகுதியில் சோதனைச்சாவடியில், கடந்த மாதம் சில ராணுவீரர்கள் காணாமல் போயினர். அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதினர்.

இந்நிலையில் நேற்று கொடூர வீடியோ காட்சி ஒன்று வெளியானது. அந்த வீடியோ, ஒரு முன்னணி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் பாகிஸ்தானின் எல்லைப்பகுதி ராணுவவீரர்கள் 15 பேர் , பின்கைகள் கட்டப்பட்ட நிலையில் வரிசையாக அமரவைக்கப்பட்டனர்.பின்னர் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு பின்னால் முகமூடி அணிந்த தலிபான்கள், ஒவ்வொருவரையும் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளும் கொடூர காட்சி நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது.
பாக். ஆப்கானிஸ்தான் எல்லையில் மலைப்பகுதி உச்சியில் இந்த காட்சி எடுக்கப்பட்டிருந்தது. 2.38 நிமிடம் ஓடிய அந்த வீடியோ காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாக். ஆப்கான் எ‌ல்லையின், கைபர் மாவட்டத்தில் பதுங்கியுள்ள தகரிர்-இ- தலிபான்கள் அமைப்பினர் தான் இந்த கொடூர செயலை அரங்‌கேற்றிருப்பதாகவும், சம்பவத்திற்கு பின்னர் தலிபான்களில் ஒருவர் பேசுகையில், எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தா‌லோ, சுட்டுக்கொன்றாலோ, இதே நிலைதான் மற்ற பாக். வீரர்களும் ஏற்படும் என பேசும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.
gnanamuthu
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: