ஹெல்மெட் அணிந்து வந்தால்தான் பெட்ரோல்: ராஞ்சி நிர்வாகம் அதிரடி!

Petrol Bunk ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று ராஞ்சி மாவட்ட நிர்வாகம் அங்குள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் சமீப காலமாக ஏராளமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் அதிக அளவில் சி்க்கி படுகாயமடைந்ததும், உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ராஞ்சி நகரில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அந்த நகர நிர்வாகம் முடிவு செய்தது.
மேலும், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் வகையில், ராஞ்சி நி்ர்வாகம் நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என அந்த நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோல் பங்குகளில் அறிவிப்பு பலகை வைக்கவும் அந்த நகர நிர்வாகம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதவிர, ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பிடிக்க பெட்ரோல் பங்குகளில் கட்டாயம் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், அந்த வாகனங்களின் பதிவு எண்களை குறித்து வைக்கவும் அந்த நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே போபால் மற்றும் நொய்டா நகரங்களின் நிர்வாகத்தினரும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
tamil.drivespark
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: