ஓட்டுத் துணி இல்லாமல் பூஜா காந்தி நடித்த படம்-பெங்களூரில் ஆர்ப்பாட்டம்!

Pooja Gandhi தண்டுபாளையா என்ற கன்னடப் படத்தில் தனது முழு முதுகையும் துணி இல்லாமல் காட்டி நடித்துள்ள நடிகை பூஜா காந்தியைக் கண்டித்து பெங்ளூரில், திரைப்பட வர்த்தக சபை முன்பு கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்ற அமைப்பின் சார்பி்ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழில் கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. தற்போது கன்னடத்தில் பிரபல நடிகையாக உள்ளார். சமீபத்தில் தேவகவுடாவை ரோல் மாடலாக அறிவித்து அவரது மகன் குமாரசாமி தலைமையில் இயங்கி வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அரசியலுக்கு வரும் முன்பு அவர் தண்டுபாளையா என்ற படத்தில் முக்கால் நிர்வாணமாக நடித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சலசலப்பு காரணமாகவே எதிர்ப்புகளிலிருந்து தப்பும் வகையில் அவர் கவுடா கட்சியில் இணைந்தார் என்று பேசப்படுகிறது.

சீனிவாஸ் ராஜ் என்பவர் இயக்கி தயாரித்துள்ள தண்டுபாளையா படம் ஒரு ரவுடிக் கும்பலின் கதையாகும். இதில் முதுகுப் பகுதி உள்ளிட்ட பின்பகுதிகள் முழுவதும் அப்பட்டமாக தெரியும் வகையில், முக்கால் நிர்வாணமாக நடித்துள்ளார் பூஜா காந்தி. இப்படத்தில் தான் நடித்தது குறித்து முன்பு பூஜா காந்தி கூறுகையில்,படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால், அவ்வாறு நடித்து உள்ளேன், முதுகுபுறத்தை மட்டும் நிர்வாணமாக காட்டி உள்ளேன். முன்புறம் சேலையால் மறைக்க முயற்சி செய்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதில் பின்பகுதி மட்டுமல்லாமல், முன்பகுதியிலும் கூட எந்த டிரஸ்ஸையும் பூஜாகாந்தி அணிந்திருப்பதாகத் தெரியவில்லை. மாறாக முன்புறமும் கூட அவர் ஒட்டுத் துணியில்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. இது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெங்களூர் திரைப்பட வர்த்தக சபை முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: