தனியாக படகு மூலம் உலகை சுற்றி வந்து 16 வயது பெண் சாதனை



நெதர்லாந்தைச் சேர்ந்த லாரா டெக்கர் என்ற 16 வயது பெண் உலகம் முழுவதையும் படகு மூலமாக சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். இவர் தனது 14வது வயதில் ஒரு படகு மூலம் தனியாக உலகை சுற்றி வர விரும்பினார். அதற்கு நெதர்லாந்து அரசு சம்மதிக்கவில்லை.
எனவே அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து குழந்தைகள் நல மையத்தின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கின் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமையவே கடந்த 2010ம் ஆண்டு ஒகஸ்டு 21-ந் திகதி கிப்ரால்டார் என்ற இடத்தில் இருந்து 38 அடி நீள குப்பி என்ற எந்திர படகின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார்.
8 மாதங்கள் கழித்து கரீபியன் கடலில் உள்ள செயின்ட் மார்டினை வந்தடைந்த டெக்கரை அவரது பெற்றோர் உட்பட சுமார் 500 பேர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தற்போது உலகை தனியாக சுற்றி முடித்த இளம் வயது வீராங்கனை என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: