தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

 சென்னை : தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட என்.ஆர்.சிவபதி, முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று மாலை பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஜெயலலலிதா தனது தோழி சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து வெளியேற்றியதிலிருந்து கட்சியிலும், அதிகாரிகள் மட்டத்திலும் மிகப்பெரிய அளவிலான மாற்றம் வந்தது. சசிகலாவுக்கு வேண்டப்பட்ட, ஆதரவான மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டனர். பலர் கட்சியின் அடிப்படைப் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டனர். அமைச்சரவையிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. 

இந்நிலையில் 19ம் தேதி பள்ளிக்கல்வித் துறை இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, வருவாய்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட வேலுமணி ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார். இதையடுத்து, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை திருச்சி மாவட்டம் முசிறி என்.ஆர்.சிவபதிக்கும், தகவல் தொழில்நுட்பத் துறை திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் தொகுதி முக்கூர் என்.சுப்பிரமணியனுக்கும் ஒதுக்கப்பட்டது.

புதிய அமைச்சர்கள் இருவரும் நேற்று மாலை 5 மணிக்கு பதவி ஏற்றனர். கவர்னர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பதவிப் பிரமாணம் எடுக்கும்போது சிவபதியும், முக்கூர் சுப்பிரமணியனும் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழி எடுக்கிறேன் என்று கூறி பொறுப்பேற்றனர்.

இந்த விழாவில் கலந்து கொள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோர் விழாவுக்கு வரவில்லை. இதற்கிடையில் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்ற இரண்டு பேரும் நேற்று மாலையே தலைமைச் செயலகத்தில் தங்களுடைய பணிகளை தொடங்கினர். அவர்களுக்கு அதிகாரிகள், சக அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 
dinakaran
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: