முஸ்லிம் மக்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயத்தின் கதவுகள் !!











ஸ்காட்லாண்டு நாட்டின் அபர்டீன் நகரில் செயின்ட் ஜான் குருபரிபாலன தேவாலயம் இயங்கி வருகிறது. இதனை நிர்வகிப்பவர் ஐசக் பூபாலன் என்ற பாதிரியார் ஆவார்.

இந்தத் தேவாலயம் அருகில் சையித் ஷா முஸ்தபா ஜமி மஸ்ஜித் மசூதி உள்ளது. அங்குள்ள முஸ்லிம் மக்கள் தினமும் 5 வேளையும் இந்த மசூதிக்கு வந்து தொழுவது வழக்கம். இடப் பற்றாக்குறை காரணமாக அவர்களில் பலரும் வீதியில் மண்டியிட்டு அமர்ந்து தொழுகை நடத்தியுள்ளனர். மிகக் குளிரான காலங்களிலும் அவ்வாறே செய்ய முடிந்தது.

இதனைக் கவனித்த பாதிரியார் பூபாலன் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தார். முதலில் தயங்கிய திருச்சபை பின்னர் மறுப்பேதும் சொல்லவில்லை. பாதிரியார் முஸ்லிம் பெருமக்களை அழைத்து தங்களது தேவாலயத்தின் உள்ளே தொழுகையை நடத்திக் கொள்ளுமாறு கூறினார். தேவாலயத்தின் பிரார்த்தனைக் கூடத்தின் ஒரு பகுதியை முஸ்லிம் மதகுருவான அஹமத் மெகர்பி வசம் ஒப்படைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட அம்மக்களும் அங்கேயே தொடர்ந்து தொழுகை செய்ய ஆரம்பித்தனர். இதன்மூலம் முதன்முதலாக முஸ்லிம் மக்களுக்காக திறந்த தேவாலயம் என்ற பெருமையை இந்தத் தேவாலயம் பெற்றுள்ளது.

இந்த உதவியை செய்யாவிட்டால் நான் என்னுடைய மதத்திற்கு உண்மையுள்ளவனாக இருக்கமாட்டேன் என்று பாதிரியார் பூபாலன் கூறுகிறார்.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: