6 வயதான அந்த நாய்க்கு சார்லி என்று பெயரிட்டுள்ளார். அந்த நாய் ஒரு போட்டியில் 113.1 டெசிபல் அளவுக்கு ஒலியுடன் குரைத்து பார்வையாளர்களை அச்சுறுத்தியது.
இவ்வளவு ஒலியுடன் குரைத்ததன் மூலம் சார்லி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. லண்டனை சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று, 2009ம் ஆண்டில் 108 டெசிபல் அளவுக்கு குரைத்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
நாயின் உரிமையாளர் ப்ரீபெரன் கூறுகையில், ''சார்லி குரைத்தால் எழும் ஒலி ராக் இசையின் போது எழும் ஒலி, இரும்பு ஆலைகளில் வெளிப்படும் ஒலி ஆகியவற்றை விடவும் அதிகம். சார்லியால் எங்களுக்கு எந்த தொல்லையும் இல்லை. அது நாங்கள் கட்டளையிட்டால் மட்டுமே குரைக்கும். மற்ற நேரங்களில் சமத்தாக அமைதியாக இருக்கும். கின்னஸ் உலக சாதனை புரிந்தது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது'' என்றார்.
பொதுவாக மனிதர்கள் பேசும் ஒலி 60 டெசிபல் அளவு இருக்கும். சில விலங்குகள் சுரங்கப்பாதையில் ரயில் செல்லும்போது எழும் (100 டெசிபல்) ஒலியை விட அதிக ஒலியை எழுப்பும்.