லோக்சபாவில், சிவசேனா எம்.பி., அனில் தேசாய் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த, மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர், பாபன் சிங் கத்தோவர் கூறியதாவது:
கடந்த, 2009, 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 2.36 லட்சம், குழந்தைகள் காணாமல் போயின. இவர்களில், 1.61 லட்சம் குழந்தைகள், இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 75 ஆயிரம் குழந்தைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. இவர்களை கண்டுபிடிக்க, மத்திய, மாநில அரசுகள்
நடவடிக்கை எடுத்து வருகின்றன.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், காணாமல் போன குழந்தைகளை கண்டறிய, சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க உத்தரவிட்டுள்ளோம்.இவ்வாறு அமைச்சர் கத்தோவர் கூறினார்.