கூடங்குளத்தில் அமைக்கப்படும் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைக்கான ஒப்புதல் கிடைக்கப்பெறும். மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலை செயல்படுத்துவதற்கான இருநாட்டின் ஒத்துழைப்பு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.
கடந்த வருடம் டில்லி வந்த போது சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ரஷ்ய அதிபர் புடின் நன்றி தெரிவித்து கொண்டார். மேலும் அவர், ரஷ்யாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தியா திருப்தி:
இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்ய அதிபரை சந்திப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் இந்தியா தவற விடாது. இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பு, உறவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியா திருப்தியடைகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் திட்டங்கள் தொடர இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை, ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.