கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளை தரும் வகையில் ஆப்பிள் நிறுவனத்துடன் ஃபெராரி கார் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. தம்தம் துறைகளில் ஜாம்பவான்களாக திகழும் இரு நிறுவனங்களும் இணைந்து கார்களில் பல புதிய தொழில்நுட்ப வசதிகளை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த தகவலை ஃபெராரி அறிவித்துள்ளது.
ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய லாஃபொரரி ஹைப்பர் கார் அறிமுகத்தின்போது இந்த தகவலை ஃபெராரி தலைவர் லூகா வெளியிட்டார். மேலும், ஆப்பிளுடனான கூட்டணி குறித்து அவர் குறிப்பிடுகையில், "அடுத்து வரும் மாதங்களில் பல புதிய அறிவிப்புகளை வெளியிடப்படும்," என்று தெரிவித்துள்ளார்.
புதிய வசதிகள்

இந்த இரண்டு ஜாம்பவான் நிறுவனங்கள் இணைந்திருப்பது பல புதிய தொழில்நுட்பங்களுக்கு அடிகோலும் என ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐபேட் மூலம் வசதிகள்

ஃபெராரி எஃப்எஃப் காரில் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் கண்களுக்கு விடுதலை என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் இயக்குவதற்கு இந்த வசதியை இரு நிறுவனங்களும் இணைந்து செய்தன.
ஃபெராரி எஃப்எஃப்

ஃபெராரி எஃப்எஃப் காரில் ஐபேட் மினி டேப்லெட் கம்ப்யூட்டரை பொருத்தி பல பொழுதுபோக்கு வசதிகளை பெறும் வகையில் இருந்தது.
எதிர்பார்ப்பு

இந்த இருநிறுவனங்களும் இணைந்து டேப்லெட் கம்ப்யூட்டர் மூலம் இன்னும் பல புதிய வசதிகளை கார்களுக்கு உருவாக்கும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்புகள் ஃபெராரியிடமிருந்து விரைவில் வரும் என தெரிகிறது.