டெல்லி: தமிழக சட்டசபையில் இருந்து 6 மாத காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கும் 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பது உறுதியாகி இருக்கிறது.
சஸ்பெண்ட் விவகாரத்தில் சட்டசபையில் எப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில்தான் ராஜ்யசபா தேர்தலில் சஸ்பென்ட் எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பது தீர்மானிக்கப்படுகிறது. வழக்கமாக சபை நடவடிக்கைகளில் இவ்வளவு காலத்துக்கு பங்கேற்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
ஆனால் தமிழக சட்டசபையிலோ சஸ்பென்ட் காலத்தில் 'எம்.எல்.ஏ' என்ற தகுதியையே பயன்படுத்த முடியாது.. அவர்களுக்கான அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க முடியாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனை சுட்டிக்காட்டும் பார்லிமென்ட் செயலக அதிகாரிகள், இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சஸ்பென்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று கூறுகின்றனர். இருப்பினும் தேர்தல் ஆனையமே இறுதி முடிவு எடுக்கும் அன்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.