இந்தியாவுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனத்துக்கும் நீண்ட கால தொடர்பும், உறவும் உண்டு. இந்தியாவில் ஆங்காங்கே ஆண்டு வந்த சமஸ்தான மன்னர்கள் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வைத்திருப்பதை தங்களது அந்தஸ்தாக கருதினர். எனவே, ஒருவரையொருவர் பார்த்து போட்டி போட்டு தங்களது செல்வ செழிப்பை பரைசாற்ற ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்கி குவித்தனர். 20ம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் மட்டும் 800 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால், மஹாராஜாக்களுக்கும், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்குமிடையிலான உறவில் பல்வேறு கசப்பான, சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கோபத்தில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை குப்பை வண்டியாக்கிய மஹாராஜா, தனது மனைவியின் செருப்பு கலரில் கார் தயார் சொன்ன மஹாராஜா என இந்த சுவாரஸ்யங்கள் நீள்கின்றன. அதனை ஸ்லைடரில் காணலாம்.
மஹாராஜாவுக்கு கோபம் வந்தால்...! பாட்டியாலாவை சேர்ந்த மஹாராஜா பூபிந்தர் சிங் புத்தம் புதிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், அந்த ஆர்டரை ஏதோ காரணம் காட்டி ரோல்ஸ்ராய்ஸ் தட்டிக் கழித்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர் என்ன செய்தார்...
குப்பை வண்டியாகிய ரோல்ஸ்ராய்ஸ் தன்னிடம் இருந்த பழைய ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் அனைத்தையும் பாட்டியாலா நகரத்தில் குப்பை வண்டிகளாக்கினார். இதை பார்த்து அதிர்ந்த ஆங்கிலேய அரசு உடனடியாக ரோல்ஸ்ராய்ஸிடம் கூறி மஹாராஜாவுக்கு புதிய காரை டெலிவிரி கொடுக்குமாறு அறிவுறுத்தியது.
பரத்பூரிலும் அதே கதைதான் இதேபோன்று, பரத்பூரை சேர்ந்த மஹாராஜா ஒவ்வொரு முறையும் 3 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து வாங்குவார். ஒரு முறை கார் பழுதடைந்ததை சரிசெய்ய ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். ஆனால், மெக்கானிக்குகளை அனுப்ப ரோல்ஸ்ராய்ஸ் நிர்வாகம் மறுத்துவிட்டது.
மிரட்டி சாதித்த ராஜா பாட்டியாலா போன்றே பழுது ஏற்பட்ட கார்களை குப்பை வண்டிகளாக்கப் போவதாக பரத்பூர் மஹாராஜா மிரட்டினார். இதனால், அதிர்ந்து போன ரோல்ஸ்ராய்ஸ் உடனடியாக மெக்கானிக் குழு ஒன்றை அனுப்பி கார்களை சரிசெய்து கொடுத்தது.
இந்த மஹாராஜா என்ன செய்தார்? அல்வார் மஹாராஜா புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவதற்கு விற்பனை பிரதிநிதியை அணுகியுள்ளார். ஆனால், புதிய காரை வழங்க முடியாது என அந்த ஆங்கிலேயர் ஏளனமாக தெரிவித்ததால் சினங்கொண்டார் ராஜா. உடனடியாக, 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை ஆர்டர் போட்டார். எதற்காக,,,
ரோல்ஸ் டாப்பை கழற்றிய ராஜா 10 கார்கள் என்ற சந்தோஷத்தில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமும் சம்மதித்து கார்களை அனுப்பியிருக்கிறது. அந்த 10 புதிய கார்களும் கையில் கிடைத்தவுடன் அரண்மனையின் ஆஸ்தான ஆசாரிகளை கூப்பிட்டார். அனைத்து கார்களிலும் இருக்கும் கூரையை பிடுங்கி எறிந்துவிட்டு குப்பை வண்டியாக மாற்றினார். இது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்த சம்பவம்.
மைசூர் மஹாராஜா மைசூர் மஹாராஜா ஒவ்வொரு முறையும் 7 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை ஆர்டர் செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
செருப்பு கலரில் ரோல்ஸ் கார் ஜாம்நகர் மஹாராஜா செய்த காரியம் அனைவரையும் திகைக்க வைக்கிறது. டிரெஸ் கலருக்கு தகுந்தவாறு பொட்டு, வளையல் போட்டுக் கொள்வது போன்று தனது மனைவியின் செருப்பு கலரில் கார் வேண்டும் என்று ரோல்ஸ்ராய்ஸ்க்கு ஆர்டர் செய்துள்ளார். செருப்பு கலரில் கொஞ்சமும் வித்தியாசம் தெரியக் கூடாது என்பதற்காக, ராணியின் செருப்பை ரோல்ஸ்ராய்ஸ் ஆலைக்கு அனுப்பி காரை வாங்கியிருக்கிறார்.
காருக்குள் ராணிக்கு மசாஜ் திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மஹாராணி சேது பார்வதியின் ரோல்ஸ்ராய்ஸ் காரில் எப்போதும் ஒரு சிறிய ஸ்டூல் ஒன்று இருக்கும். அந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டு ராணி தனது கால்களை மசாஜ் செய்ய சொல்வாராம். இருக்கையில் அமர்ந்து மசாஜ் செய்தால் வெளியாருக்கு தெரியும் என்பதற்காகவே இந்த ஸ்டூலாம்.
மன'தில்' கொண்ட மஹாராஜா ஆயிரம் ஆண்டுகள் நீண்ட பாரம்பரியம் கொண்டதாக உதய்பூர் சமஸ்தானம் குறிப்பிடப்படுகிறது. இதன் மஹாராஜாவாக இருந்த போபால் சிங் 1924ல் டூரர் ரோல்ஸ்ராய்ஸ் காரை பயன்படுத்தியிருக்கிறார். மேலும், ரோல்ஸ்ராய்ஸ் காரை அவர் மிகவும் நேசித்துள்ளார். தினமும் இந்த காரில் வேட்டையாடுவதற்கு செல்வது வழக்கம். அப்போது, படுவேகத்தில் காரை ஓட்டுவது அவருக்கு பிடித்தமான ஒன்றாக கூறுகின்றனர். ஆனால், அவரால் அதுபோன்று தொடர்ந்து காரை வேகமாக ஓட்ட முடியவில்லை. ஏன்...?
வாதம் வந்தாலும் பிடிவாதம் போபால் சிங் வாத நோய் வந்து இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயலிழந்தது. அப்போது கூட அவர் தனது வேட்டையாடும் பழக்கத்தையும், கார் ஓட்டுவதையும் விட மனமில்லை. கைகளால் ஓட்டுவதற்கு வசதிகள் கொண்ட காரை அப்போதே ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திடம் கஸ்டமைஸ் செய்து வாங்கி ஓட்டியிருக்கிறார். ஆனால், அந்த கார் ரிப்பேர் ஆனதால் தொடர்ந்து அவரால் ஓட்டமுடியவில்லை. இந்த கார் தற்போது மேம்படுத்தப்பட்டு அரண்மனையில் காட்சி பொருளாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்போதும், அழகு மாறாமல் ஏரி கரையில் நிமிர்ந்து நிற்கும் உதய்பூர் அரண்மனையின் வரலாற்றில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் கேரேஜும் வரலாற்றில் இடம் பிடிக்கிறது.