தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!l

Healthy Ways To Eat Honeyஅனைவருக்குமே தேனின் நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி நன்கு தெரியும். அதிலும் தேன், உடலில் வரும் பிரச்சனைகளான இருமல், தொண்டைப் புண் போன்றவற்றை குணமாக்கவும், சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் இல்லாமல் அழகாக வைப்பதற்கும், உடல் எடையை விரைவில் ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, நாம் இதுவரை செயற்கை முறையில் தயாரித்த சர்க்கரையைத் தான் அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்த்து சாப்பிடுகிறோம். ஆகவே அந்த உணவுப் பொருட்களில் சர்க்கரைக்கு பதிலாக, தேனை சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேனைப் பற்றிய ஒரு உண்மை என்னவென்றால், தேன் ஆரோக்கியமான ஒன்று தான். அதற்காக அதனை தவறான முறையில் சாப்பிட்டால், அது உடல் எடையை அளவுக்கு அதிகமாக்குவதோடு, நீரிழிவு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். எனவே தேனை ஆரோக்கியமான வழியில் சாப்பிடுவது மிகவும் முக்கியமானது. இப்போது அந்த தேனை எவ்வாறெல்லாம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பதைப் பார்ப்போம்!!

வெதுவெதுப்பான நீரில்: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, செரிமானம் அதிகரித்து, அமிலச் சேர்க்கையைத் தடுத்துவிடும்.

எலுமிச்சை ஜூஸ்: பொதுவாக எலுமிச்சை ஜூஸ் உடன் சர்க்கரையைத் தான் சேர்த்து குடிப்போம். ஆனால் அதில் சர்க்கரைக்கு பதிலாக தேனை கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும்.

டீ: சர்க்கரையை சேர்த்து சாப்பிடும் பானங்களுள் டீயும் ஒன்று. எனவே அத்தகைய டீயில் சர்க்கரையை சேர்ப்பதற்கு பதிலாக தேனை சேர்த்து குடிக்கலாம். அதிலும் ப்ளாக் டீக்கு பதிலாக க்ரீன் டீயில் கலந்து குடிப்பது, அதை விட மிகவும் சிறந்தது.

சாலட்: டயட்டில் சாலட் சாப்பிடுபவர்களாக இருந்தால், அதன் மேல் சிறிது தேனையும் கலந்து சாப்பிடலாம். ஆனால் பழங்களால் செய்யும் சாலட்களில் தேனை சேர்க்க வேண்டாம். ஏனென்றால், அதில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும்.

இனிப்பு வகைகள்: டெசர்ட் எனப்படும் இனிப்பு வகைகளில் இனிப்புக்காக சர்க்கரையை பயன்படுத்துவதற்கு பதிலாக தேனைப் பயன்படுத்துவது சிறந்ததாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பால்: சிலர் பாலில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பார்கள். இது சற்று மந்தமான மற்றும் வித்தியாசமான சுவையில் இருக்கும். ஆனால் அதே பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால், இது இன்னும் மிகுந்த சுவையுடன் இருக்கும். பாலில் சர்க்கரையை சேர்த்து குடிப்பதை விட தேன் கலந்து குடிப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும்.

பாதாம்: பாதாமை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.

இஞ்சி: சளி மற்றும் இருமல் குணமாவதற்கு, தேனில் இஞ்சியை நனைத்து சாப்பிட்டால், சளி மற்றும இருமல் போவதோடு, அதனால் ஏற்பட்ட தொண்டைப் புண்ணும் குணமாகிவிடும்.

தயிர்: தயிரில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இவை இரண்டுமே ஆரோக்கியமானது. ஆகவே அதனை ஆரோக்கியமானதாக்குவதற்கு தயிருடன் தேனை சேர்த்து சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: