கோழிலே இம்புட்டு மேட்டரா !?


கோழி என்றாலே தெரியாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா ?

கோழி மனிதனால் வீடுகளிலும் அதற்கான கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு பறவையாகும். இதில் பெண்ணினம் கோழி எனவும் ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகிறது.

2003-ல்  உலகில் இவற்றின் எண்ணிக்கை 24பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும் பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அந்த அளவுக்கு உலகம் முழுக்க அநுதினமும் பல வகைகளில் உணவாகி வருகின்றது என்றாலும் அதன் உற்பத்தியோ கணக்கில் அடங்காதது  அந்த அளவுக்கு உற்பத்தியும் பயன்பாடும் நிறைந்து காணப்படுகின்றது.

கோழிகளிலே நாட்டுக்கோழி  பிராய்லர்கோழி  நெருப்புகோழி  வான்கோழி நீர்க்கோழி இப்படி பலவகைகளில் இருந்தாலும் தற்காலத்தில் மக்கள் மத்தியில் அதீத பிரசித்தி பெற்றது பிராய்லர் கோழிதான்

இன்றைய நிலையை எடுத்துக் கொண்டால் கோழியின் வளர்ப்புமுறை என்ற ஒரு கலை எல்லா நாடுகளிலும் பல கோணங்களில் வளர்ந்து காணப்படுகின்றது. எல்லா நாடுகளையும் சேர்ந்த அசைவ விரும்பிகள் கோழியை ஒரு விஷேசித்த உணவாக உட்கொண்டு வருகின்றனர். சமையல் கலைகளிலும் கோழி ஒரு உன்னதமான மாமிச உணவாக சமைக்கப்பட்டு வருகின்றது. உணவகங்களில் வித விதமாக சமைக்கப்பட்ட கோழிக்கறிகளுக்கு கவர்ச்சிகரமான  பெயர்களைச்சூட்டி விற்பனை செய்து வருகின்றனர்  ஒவ்வொரு ரகங்களுக்கு ஒவ்வொரு பெயர்களை சூட்டினாலும் எல்லா ரகங்களும் படு டேஸ்ட்தான். 

உதாரணத்திற்கு – சிக்கன் சம்பல் சிக்கன் பிரியாணி சிக்கன் பிரைட் ரைஸ் சிக்கன் மசாலா ப்ரை சிக்கன் மஞ்சூரியன் சிக்கன் பாஸ்தா தேன் சிக்கன் கபாப் சில்லி சிக்கன் கராஹி பெப்பர் சிக்கன் தந்தூரி மொஹல் சிக்கன் கறி லெமன் இன்னும் இப்படியே 1000-த்துக்கும் மேல் சொல்லிக் கொண்டே போகலாம் என்றால் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

எங்கே டேஸ்ட் இருக்குதோ அங்கே ஆபத்தும் இருக்கும் ஆம் அந்த வகையில் பார்த்தால் இந்த கோழியும் விதி விலக்கள்ள எப்படியென்றால் சமைத்த கோழிகறியை 12நேரத்திற்குள் முடித்துவிடவேண்டும் அதற்குமேல் வைத்திருக்கும் கோழிக்கறிகளுக்கு எந்தவித உத்திரவாதமும் கொடுக்கமுடியாது  அது குளிர்சாதன பெட்டிக்குள் வைத்த கோழிக் கறியாக இருந்தாலும் அதற்கும் உத்திரவாதம் கொடுக்கமுடியாது. சமைப்பதற்கு முன்பு முழு கோழியையோ அல்லது துண்டாக்கப்பட்ட கோழி இறைச்சியையோ குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒரு குறிப்பிட்ட காலஅளவுக்கு வைத்து பின்பு சமைத்துவிடவேண்டும்  சமைக்கப்பட்ட கோழி இறைச்சியை 24 மணிநேர்திற்குள் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து பின்பு நன்கு சூடுபடுத்தி உட்கொண்டுவிடவேண்டும்.

சமைக்கப்பட்ட கோழிக் கறியில் ஏதேனும் சந்தேகப்படும்படி வாசனையோ அல்லது மசாலாவின் கலவையில் மாற்றங்கள் காணப்பட்டால் உட்கொள்ளாமல் அதை தவிர்த்துவிடுவது நல்லது.

கோழி முட்டையிலும் ஏகப்பட்ட புரதச்சத்துக்கள் இருக்கின்றன  அதே நேரத்தில் முட்டையின் தரம் அறிந்து பாவிப்பது நல்லது.

ஆக மொத்தத்தில் உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவதில் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

நன்றி: http://nijampage.blogspot.in
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: