பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் வெளிப்புற படப்பிடிப்பின் போது கேரவன்களை பயன்படுத்துவது வழக்கம். சகல வசதிகளுடன் இருக்கும் கேரவன்தான் பிஸியாக இருக்கும் நட்சத்திரங்களுக்கு வீடாக பயன்படுகிறது. ஆனால், பாலிவுட் நட்சத்திரங்கள் எப்போதுமே ஆடம்பர பிரியர்கள்.
வீடாகட்டும், காராக இருக்கட்டும் எதுவாயினும் அதில் ஆடம்பரம் மிளிர வேண்டும். அந்த வகையில், ஷாருக்கானுக்காக ஆடம்பர பஸ் ஒன்றை பிரபல டிசி கஸ்டமைசேஷன் நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது. மாளிகை போல் காட்சி அளிக்கும் அந்த பஸ்சின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
மல்டி ஆக்சில் பஸ்

இயக்குனர் ஷங்கர் படத்தில் வரும் கனவு பஸ் போன்று வெளிப்புறம் காட்சியளிக்கிறது. மல்டி ஆக்சில் சேஸிஸ் கொண்டதால் 14 மீட்டர் நீளம் கொண்ட இந்த பஸ் சாதாரண பஸ்களை விட நீளம் அதிகம் கொண்டதாகவும், உட்புறத்தில் அதிக இடவசதியையும் கொண்டிருக்கிறது. ரூ.3.5 கோடி விலை மதிப்புடையதாக கூறப்படுகிறது.
ஓய்வுக் கூடம்

உட்புறத்தில் நுழைந்தவுடன் ஒரு பஸ்சில் ஏறிய உணர்வை மறக்கடிக்கிறது. சிறிய டேபிள், பெரிய எல்இடி டிவி, மெத் மெத்தென சோபாவுடன் மிக ஆடம்பரமாக இருக்கிறது. டாய்லெட், டைனிங் டேபிள் என இதர வசதிகளும் உண்டு.
வண்ண விளக்குகள்

இந்த அறையை வைத்தே ஒரு ஷூட்டிங் நடத்து அளவுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உட்புறம் ஜொலிக்கிறது. சிறு அலுங்கல், குலுங்கல் இருக்காது. 3 மாதங்களில் இந்த பஸ்சை டிசி வடிவமைத்து கொடுத்துள்ளது.
மேக்கப் அறை

ஓய்வு அறைக்கு அருகிலேயே மேக்கப் அறை இருக்கிறது. டிராலியில் மேல் ஒரு சொகுசு சேர் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேக்கப் போட்டுக் கொண்ட டிவி பார்க்க முடியும். மேலும், அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்ட கூடத்தின் பாதியளவுக்கு நகர்ந்து வர முடியும்.
விருந்தினர் அறை

சக நடிகர்கள் மற்றும் இதர விருந்தினர்கள் அமர வசதியாக ஓய்வு அறை தவிர்த்து மற்றொரு அறையும் உண்டு. அதிலும் டிவி இருக்கிறது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி கருவி

மற்றொரு அறையில் உடற்பயிற்சி கருவி உள்ளது. அதனை மடக்கி வைக்க முடியும் என்பதோடு, பீரோ போன்று மூடி வைத்துக் கொள்ளும் வகையில் கதவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அங்கும் அமர்ந்து கொள்ள வசதியாக ஒரு சொகுசான சேர் போடப்பட்டுள்ளது.
எல்இடி டிவி

மிக அகன்ற திரை கொண்ட எல்இடி டிவி பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு கீழே சிடிக்கள் மற்றும் இதர பொருட்களை வைப்பதற்கான இடவசதியும் இருக்கிறது.