கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல்

ஈரோடு: எனது தந்தை ஞானப்பிரகாசம் அப்பாவி. அவரை தூக்கில் போட்டால் நான் எனது கைக் குழந்தையோடு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் தூக்குக் கொட்டடியின் கீழ் நிற்கும் வீரப்பன் கூட்டாளியான ஞானப்பிரகாசத்தின் மகள் பெனித்தா மேரி. 

பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளிகளான மீசை மாதையன், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகியோரின் குடும்பத்தினர் நிலை தடுமாறிப் போயுள்ளனர். நால்வரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கில் போடப்படும் அபாயம் உள்ளது. 

இதனால் நால்வரின் குடும்பத்தினரும் அழுதபடி காணப்படுகின்றனர். 

நால்வரில் ஒருவரான பிலவேந்திரனின் உறவினரான ஜான் பிரிட்டோ கூறுகையில், 1993-ம் ஆண்டில் ஒரு நாள் அதிகாலை 5 மணிக்கு பால் கறந்து கொண் டிருந்த என் தாய் மாமன் பிலவேந்திரனை போலீசார் விசாரிக்க கூட்டி சென்றனர். அதன்பிறகு என்ன ஆனார்? என்று தெரியவில்லை. பங்கு தந்தை ஒருவரின் தலையீட்டால் என் மாமாவை கர்நாடக அமைதி படை கைது செய்தது தெரிய வந்தது. காவிரி நதி நீர் பிரச்சினையை மனதில் வைத்து கொண்டு பிலவேந்திரன் போன்றவர்களை தூக்கில் போட்டு சாகடிக்க நினைக்கிறார்கள் என்று கூறினார். 

பிலவேந்திரன் அக்காள் அமலோற்பவ மேரி கூறுகையில்,நாங்கள் அன்பை நேரிக்கும் கிறிஸ்தவ குடும்பம், ஏழைகள் அவர்கள் என்ன செய்தாலும் கேட்பதற்கு இங்கு யாரும் இல்லையே என்றார். 

ஞானப்பிரகாசத்தின் மகள் பெனித்தா மேரி அழுதபடி கூறுகையில், என் அப்பா ஜெயிலுக்கு போனபிறகு என் தாயார் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். சிறையில் அவரை பார்க்க சென்ற போது அப்பாவுக்குஎன்னை அடையாளமே தெரியவில்லை. என்னை அப்பா கட்டி பிடித்தபடி நான் பெற்ற மகளை எனக்கே அடையாளம் தெரியவில்லையே எனஅழுதார். 

என் அப்பா அப்பாவி. அவரைதூக்கில் போட்டால் நான் கைக் குழந்தையுடன் நடுரோட்டில் தீக்குளித்து செத்துவிடுவேன். எப்படியாவது என் அப்பாவை மத்திய-மாநில அரசுகள் மீட்டு எங்களுடன் சேர்த்துவைக்க வேண்டும் என்றார் கதறியபடி.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: