கார், பைக் மட்டுமல்ல அதிவேக எந்திர படகுகளையும் லாவகமாக இயக்கத் தெரிந்தவர். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சிகளில் தீவிர முயற்சியுடன் ஈடுபட்டுள்ளார். அஜீத் வசம் சொந்தமாக நின்ஜா உள்ளிட்ட சூப்பர் பைக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில், அவர் சமீபத்தில் துபாயில் டுகாட்டி டயாவெல் பைக்கை சினிமாவிற்காக ஓட்டியிருக்கிறார். சில படங்களில் அவர் சூப்பர் பைக்குகளை ஓட்டிய காட்சிகள் அமைந்திருந்தாலும் அஜீத் திறமைக்கு தீணி போடவும், அவரது திறமையைவெளிக்காட்டும் வகையிலும் இந்த காட்சியை தலைப்பிடப்படாத புதிய படத்திற்காக இயக்குனர் விஷ்ணுவர்தன் வைத்திருக்கிறார். அஜீத் கைகளுக்கு சவால் விடும் டுகாட்டி டயாவெல் பைக்கில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.
டுகாட்டி டயெவெல் ஓர் அறிமுகம்

இன்டியானாவுக்கு(1986-1990)அடுத்து டுகாட்டி தயாரிக்கும் இரண்டாவது குரூஸர் பைக் மாடல். 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஹார்லி டேவிட்சனின் விடாப்பிடியான வாடிக்கையாளர்களை கூட இந்த பைக் தன் பக்கம் திருப்பியது. அதிலும், பெண் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்த மாடல்.
கீ லெஸ் இக்னிஷன் பாக்கெட்டில் சாவி இருந்தாலே நீங்கள் 2 மீட்டர் தூரத்தில் நின்றிருந்தால் இந்த பைக்கின் இக்னிஷன் சிஸ்டம் தானாக ஆன் ஆகி எஞ்சின் ஸ்டார்ட் ஆக தயார் நிலையில் இருக்கும். கையில் இருக்கும் ரிமோட் சாவியை சுவிட்ச் ஆப் செய்தால் பெட்ரோல் செல்வது நிறுத்தப்பட்டுவிடும் என்பதோடு, ஸ்டீயரிங் லாக் ஆகிவிடும்.
எஞ்சின் இந்த பைக்கில் டுகாட்டியின் 1198 சூப்பர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 1198.4சிசி திறன் கொண்ட டிவின் சிலிண்டர் எஞ்சினில் மாறுதல்கள் செய்து பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 162 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் அலாதி சக்தி கொண்டது. 6 ஸ்பீடு வெட் மல்டிபிள் கிளட்ச் சிஸ்டத்துடன் கூடிய கியர் பாக்சை கொண்டிருக்கிறது.
ஹெவி வெயிட்

210 கிலோ எடை கொண்ட இந்த பைக் ஏபிஎஸ் சிஸ்டத்துடன் சேர்த்து 239 கிலோ எடையுடையது. இருப்பினும், எளிதான கையாளுமை கொண்டதாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.
சைலன்சர் இரட்டை அலுமினியம் மப்ளர்கள் கொண்ட எக்ஸாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இதன் சப்தம் மிக அலாதியாக இருக்கும். இந்த புகைபோக்கி குழாய்கள் தொழில்நுட்ப ரீதியில் மட்டுமின்றி தோற்றத்தில் டுகாட்டி டயாவெலுக்கு பெருமை சேர்க்கிறது.
டயர்கள் டுகாட்டியின் தொழில்நுட்ப பார்ட்னரான பைரேல்லி டயர் நிறுவனம் இந்த பைக்குக்கு நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களோடு தயாரித்து கொடுத்து வருகிறது. புதிய டிரெட் அமைப்புடன் இந்த டயர் சறுக்குத் தரைகளிலும் ஸ்திரமான ஓட்டத்தை வழங்கும் என்பது சிறப்பம்சம்.
சஸ்பென்ஷன்

முன்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் இருக்கிறது. இதனையும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.
சக்கரம் பின்புறம் 14 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது அழகுக்கு அழகு சேர்க்கிறது.
பவர்ஃபுல் பிரேக்கிங் சிஸ்டம் வேகத்துக்கு தக்கவாறு பைக்கை நிறுத்துவதற்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதிக பாதுகாப்பை உறுதி செய்யும் பாஷ் நிறுவனத்தின் ஏபிஎஸ் சிஸ்டத்துடன் இணைந்து துணை புரியும் 265 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் உண்டு.
இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் இரண்டு டிஜிட்டல் திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலே இருக்கும் எல்சிடி திரையில் ஸ்பீடோமீட்டர், ஆர்பிஎம் மீட்டர், கூலண்ட் வெப்ப நிலை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே இருக்கும் டிஎஃப்டி திரையில் டிரைவிங் நிலைகளின் விபரம் உள்ளிட்டவை தெரியும். இதற்கான கன்ட்ரோல் சுவிட்சுகள் ஹேண்டில்பாரில் கொடுக்கப்பட்டுள்ளது.
கார்பன் ஃபைபர் வைன்ட்ஷீல்டு காற்றை கிழித்துச் செல்லும் இந்த பைக்கின் வைன்ட்ஷீல்டு மற்றும் சைடு கார்டுகள் உறுதியும், இலகு எடையும் கொண்ட கார்பன் ஃபைபரான் ஆனது.
ஓட்டுவது சுலபமல்ல அதிக எடை கொண்ட பைக் மட்டுமல்ல இந்த பைக்கின் உந்துசக்தி மற்றும் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் கன்ட்ரோல் சுவிட்சுகள் குறித்து போதிய நன்கு அறிந்து கொண்டால் மட்டுமே சிறப்பாக ஓட்ட முடியும். ஆனால், அஜீத்துக்கு இதுபோன்ற பைக்குகளில் நல்ல பரீட்சயம் இருப்பதால் லாவகமாக ஓட்டி அசத்தி வருகிறார்.
சிறப்பு செய்தி டுகாட்டி டயாவெல் பைக்கை ஓட்டிய காட்சிகள் படமாக்கப்பட்ட பின்பு அதிவேக படகில் செல்லும் காட்சிகளும் படமாக்கப்பட்டதாக இந்த படத்தின் சண்டை நிபுணர் லீ விட்டாகெர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், அஜீத்தின் திறமையால் இது சிறப்பாகவும், இந்த காட்சிகள் சாத்தியப்பட்டது என்றும் அவர் அந்த செய்தியில் பெருமைபட தெரிவித்துள்ளார்.