வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா நடனமாடுவது போன்ற ஒரு வீடியோ, யூடியூபில் படு வேகமாக பரவி வருகிறது.
ஏராளமான பேர் அதைப் பார்த்து ரசித்துள்ளனர்.
ஒரு டாக் ஷோவின்போதுதான் இந்த டான்ஸைப் போட்டார் மிஷல். அவரும் நிகழ்ச்சியை நடத்திய ஜிம்மி பாலோனும் சேர்ந்து டான்ஸ் ஆடியதுதான் தற்போது யூடியூபில் ஹிட் ஆகியுள்ளது.
வித்தியாசமான உடையில் ஜிம்மியும், மிஷலும் காணப்படுகின்றனர். இந்த டான்ஸுக்கு கோ ஷாப்பிங், கெட் கிராசரிஸ் என்று பெயர் வேறு வைத்துள்ளனர்.
அதாவது கடைக்குப் போய் மளிகை சாமான் என்பது இதன் அர்த்தம். உடல் நலனைப் பேணுவது மற்றும் ஆரோக்கியமான உணவை உண்பது என்பது குறித்த டாக் ஷோ இது.
இந்த வீடியோவை இதுவரை 50 ஆயிரம் பேர் பார்த்து விட்டனர். கிட்டத்தட்ட 10,000 முறை லைக் கொடுத்துள்ளனர். மிஷல் மிகவும் இயல்பாக இருக்கிறார். எதார்த்தமாக இருக்கிறார்.
அதிபரின் மனைவி போலவே தெரியவில்லை என்று பலர் கருத்து தெரிவித்து மிஷலைப் பாராட்டியுள்ளனர்.